ஆகஸ்ட் 2007
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
<< | ஆகத்து 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
ஆகஸ்ட் 2007, ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17 இல் தொடங்கி செப்டம்பர் 16 இல் முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- ஆகஸ்ட் 3 - ஆடிப்பெருக்கு
- ஆகஸ்ட் 7 - ஆடிக் கார்த்திகை
- ஆகஸ்ட் 12 - ஆடி அமாவாசை
- ஆகஸ்ட் 15 - ஆடிப் பூரம், அரவிந்தர் நாள், தேவமாதா மோட்சத் திருநாள்
- ஆகஸ்ட் 16 - நாக சதுர்த்தி
- ஆகஸ்ட் 24 - வரலட்சுமி விரதம்
- ஆகஸ்ட் 26 - ஓணம்
- ஆகஸ்ட் 28 - ஆவணி அவிட்டம்
விடுதலை நாட்கள்
[தொகு]- ஆகஸ்ட் 1 - பெனின், சுவிற்சர்லாந்து
- ஆகஸ்ட் 5 - புர்கினா பாசோ
- ஆகஸ்ட் 6 - ஜமெய்க்கா
- ஆகஸ்ட் 7 - கொலம்பியா
- ஆகஸ்ட் 9 - சிங்கப்பூர்
- ஆகஸ்ட் 10 - ஈக்குவாடோர்
- ஆகஸ்ட் 11 - சாட்
- ஆகஸ்ட் 14 - பாகிஸ்தான்
- ஆகஸ்ட் 15 - பாஹ்ரேன், இந்தியா, வட கொரியா, தென் கொரியா
- ஆகஸ்ட் 16 - சைப்பிரஸ், புதுச்சேரி
- ஆகஸ்ட் 17 - இந்தோனீசியா
- ஆகஸ்ட் 24 - ஆப்கானிஸ்தான்
- ஆகஸ்ட் 24 - உக்ரேன்
- ஆகஸ்ட் 25 - உருகுவே
- ஆகஸ்ட் 27 - மல்டோவா
- ஆகஸ்ட் 31 - கிர்கிஸ்தான், ட்றினிடாட் மற்றும் டொபாகோ, மலேசியா
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- ஆகஸ்ட் 1 - ஐக்கிய அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் மாநிலங்களை இணைக்கும் இண்டர்ஸ்டேட் பாலம் மிசிசிப்பி ஆற்றில் வீழ்ந்ததில் 6 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- ஆகஸ்ட் 2 - ரஷ்யாவின் சகாலின் நகரில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. (ரஷ்யன் நியூஸ்)
- ஆகஸ்ட் 4 - நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய்க் கோளில் அடுத்த ஆண்டில் தரையிறக்கி ஆய்வுகள் மேற்கொள்ளவென பீனிக்ஸ் என்னும் கலத்தை விண்ணுக்கு ஏவியது. (வாஷிங்டன் போஸ்ட்)
- ஆகஸ்ட் 4 - இந்தியா, வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பெரும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 8 - நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை (படம்) கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.
- ஆகஸ்ட் 9 - அஸ்ஸாமில் இரு வேறு நிகழ்வுகளில் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரிகள் சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- ஆகஸ்ட் 11 - மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்களால் கடலுக்கடியில் ஒரு வாரத்தின் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள் நவம்பர் 19, 1941இல் ஜேர்மனியர்களினால் 645 ஆஸ்திரேலியர்களுடன் மூழ்கடிக்கப்பட்டு காணாமல்போன சிட்னி என்ற போர்க்கப்பலின் சிதைவுகளென அடையாளங் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.(தி ஏஜ்)
- ஆகஸ்ட் 15 - பெருவின் தலைநகர் லீமாவில் இருந்து 300 கிமீ தொலவில் 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். (தி ஏஜ்)
- ஆகஸ்ட் 15 - பாலி ஒன்பது: இந்தோனேசியா, பாலியில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஒன்பது அவுஸ்திரேலியர்களில் மூவரின் மேன்முறையீட்டினை பாலி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- ஆகஸ்ட் 18 - துருக்கிய அட்லஸ் ஜெட் விமானம் ஒன்று சைப்பிரசில் இருந்து துருக்கி நோக்கிச் செல்லும் போது தீவிரவாதிகளால் கடத்ததும் முயற்சி தோல்வி அடைந்தது. எண்ணெய் நிரப்புவதற்காக அண்டால்யா விமான நிலையத்தில் தரையிறக்கிய போது தீவிரவாதிகள் சரணடைந்தனர். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- ஆகஸ்ட் 21 - நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் என்டெவர் விண்ணோடம் (படம்) ஏழு விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாகக் பூமி திரும்பியது. (ஐஎச்ரி)
- ஆகஸ்ட் 25 - பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி தாதி பிரகாஷ்மணி (வயது 87), ராஜஸ்தானில் காலமானார். (தினக்குரல்)
- ஆகஸ்ட் 25 - இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர். (ஆந்திராநியூஸ்)
- ஆகஸ்ட் 25 - கிறீசில் இடம்பெற்ற மிக மோசமான காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. (பிபிசி)
- ஆகஸ்ட் 25 - பல்கேரியாவைச் சேர்ந்த பேத்தர் ஸ்டொய்சேவ் என்பவர் ஆங்கிலக் கால்வாயைக் மிக விரைவில் கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தினார். (டைம்ட் ஃபைனல்ஸ்)
- ஆகஸ்ட் 28 - இலங்கை, மாத்தளையிலுள்ள மகாத்மா காந்தி உருவச்சிலை இனந்தெரியாத விஷமிகளால் அடித்து நொருக்கப்பட்டது. (தினக்குரல்)
- ஆகஸ்ட் 31 - இலங்கையின் சுசாந்திகா ஜெயசிங்க ஜப்பனின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டிகளில் மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் 22.63 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். (டெய்லி மிரர்)
- ஆகஸ்ட் 31 - இளவரசி டயானாவின் 10வது நினைவு நாள் லண்டனில் கொண்டாடப்பட்டது. எலிசபெத் மகாராணி மற்றும் அரச குடும்பத்தினர், பிரதமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 31 - ஆப்கானிஸ்தான், காபுல் விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு 10 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஆகஸ்ட் 1 - யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவரும் இளம் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சன் (வயது 24) சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (புதினம்)
- ஆகஸ்ட் 2 - யாழ்ப்பாணத்தில் தணிகாசலம் சசிரூபன் (வயது 25) என்ற மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (புதினம்)
- ஆகஸ்ட் 4 - யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்த மாணவர் பாலசிங்கம் சுரேஸ் (வயது 21) உயிரிழந்தார். (புதினம்)
- ஆகஸ்ட் 8 - அம்பாறை கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் தாக்குதல் நடவடிக்கைக்காக இறங்கிய இலங்கை சிறப்பு அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 4 படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஆகஸ்ட் 8 - யாழ்ப்பாணம் தென்மராட்சியில் பொதுமக்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- ஆகஸ்ட் 12 - யாழ்ப்பாணம் தச்சன்தோப்புப் பகுதியில் நிகழ்ந்த கிளைமோர் தாக்குதலில் 4 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஆகஸ்ட் 13 - நெடுங்கேணியில் பயணிகள் பேருந்து] மீது இலங்கை வான்படையின் மிக் ரக வானூர்தி நடத்திய தாக்குதலில் சுபாஜினி (வயது 20) என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். (புதினம்)
- ஆகஸ்ட் 15 - கொழும்பில் தினக்குரல் ஊடகவியலாளர் கே. பி. மோகன் என்பவர் மீது வைத்து அசிட் வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். (டெய்லி மிரர்)
- ஆகஸ்ட் 20 - வவுனியாவில் செட்டிகுளம் உலுக்குளம் பகுதியில் காவற்படை சோதனை நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பெண் ஊர்காவல் படையினர் உட்பட நான்கு ஊர்காவல் படையினரும் சாரதியொருவரும் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர். (தினக்குரல்)
- ஆகஸ்ட் 20 - யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (தினக்குரல்)
இறப்புகள்
[தொகு]- ஆகஸ்ட் 25 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்