பெப்ரவரி 2016
<< | பெப்ரவரி 2016 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | |||||
MMXXIV |
பெப்ரவரி 2016 (February 2016), 2016 நெட்டாண்டின் இரண்டாவது மாதமாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 13:
- அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அன்டொனின் ஸ்கலியா 79 வயதில் காலமானார்.
- பெப்ரவரி 12:
- மாலியின் வடக்கே கிடால் நகரில் ஐநா தளம் ஒன்றின் மீது இசுலாமியப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் ஐந்து ஐநா பணியாளர்கள் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர். (AFP via Al Arabiya) (Reuters)
- லிபியாவின் மிக்-23 விமானம் ஒன்று பங்காசி நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டது. (ஏஎஃப்பி)
- தவானில் பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது. குறைந்தது 30 காணாமல் போயுள்ளனர். (சீஎனென்)
- பெரும் சமயப்பிளவு: திருத்தந்தை பிரான்சிசு மாஸ்கோவின் உருசிய மரபுவழித் திருச்சபைத் தலைவரை அவானாவில் சந்தித்தார். (சீஎனென்)
- பெப்ரவரி 11:
- அங்கோலாவில் இரண்டு மாதங்களில் மஞ்சள் காய்ச்சல் நோயால் 37 பேர் உயிரிழந்தனர். (ஏஏபி)
- மெக்சிக்கோவில் மொன்டெரே நகரில் சிறை ஒன்றில் இடம்பெற்ற கலவரங்களில் 52 கைதிகள் உயிரிழந்தனர். (பொக்சு) (சீஎனென்)
- நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐன்சுடைனினால் எதிர்வு கூறப்பட்ட ஈர்ப்பு அலைகளைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க அறிவியலாளர்கள் அறிவித்தனர். (நேச்சர்), (கார்டியன்)
- பெப்ரவரி 5:
- சிரிய இராணுவம் அட்டாமான் நகரைக் கைப்பற்றியது. (ராய்ட்டர்சு)
- அல்-சபாப் போராளிகள் மெர்க்கா நகரைக் கைப்பற்றினர். ஆப்பிரிக்க ஒன்றியம், மற்றும் சோமாலிப் படைகள் அங்கிருந்து வெளியேறினர். (ஏஏபி)
- சிம்பாப்வேயில் நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை அடுத்து அரசுத்தலைவர் ராபர்ட் முகாபே அங்கு அவசரஃஇலையைப் பிறப்பித்தார். (ஏஏபி)
- இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பாலம் ஒன்றில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பூர்ணா ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர். (இந்துத்தான் டைம்சு)
- புவேர்ட்டோ ரிக்கோவில் இசீக்கா தீநுண்மம் பரவியதை அடுத்து அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. (ஏபிசி)
- பெப்ரவரி 4:
- சிரியாவின் அலெப்போ நகரில் உருசியா நடத்திய வான்தாக்குதலில் குறைந்தது 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. (ஏஎஃப்பி)
- பொலினீசியாவின் தொங்காவில் சீக்கா வைரசு தொற்றிய இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். (நியூசிலாந்து வானொலி)
- எசுப்பானியாவில் சீக்கா நோய் தொற்றிய ஒரு கர்ப்பிணிப் பெண் இனங்காணப்பட்டார். (பிபிசி)
- ஜூலியன் அசாஞ்சு தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என ஐநா அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. (பிபிசி)
- இலங்கையின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் 1949 இற்குப் பின்னர் முதற் தடவையாக தமிழிலும் தேசியப் பண் பாடப்பட்டது. (நியூயோர்க் டைம்சு) (இண்டியன் எக்சுபிரசு)
- பெப்ரவரி 3:
- சீபூத்தீ நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பினால் விமானத்தில் துளை ஒன்று ஏற்பட்டதை அடுத்து முக்தீசூவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. (பிபிசி)
- பெப்ரவரி 2:
- கிழக்கு ஆப்கானித்தானில் இசுலாமிய அரசு வானொலி நிலையம் மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 29 போராளிகள் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- ஒந்துராசில் 3,649 பேருக்கு சீக்கா வைரசு பரவியுள்ளதை அடுத்து அங்கு அரசு அவசரகால நிலையைப் பிறப்பித்தது. (ஏபி)
- பெப்ரவரி 1:
- சீனாவில் பொன்சி முறைமையின் கீழ் 900,000 பேரை 50 பில்லியன் யுவான்களுக்கு ஏமாற்றியதாகக் குற்ரம் சாட்டப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர். (பிபிசி)
- ஐக்கிய அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக கொலராடோ, கலிபோர்னியா மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. (அக்கியூவெதர்)
- இசீக்கா தீநுண்மம் உலகளாவிய ரீதியில் பெரும் தீங்கை விளைவிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. (பிபிசி)
- 2013 இல் திபெத்திய மதகுரு உட்பட மூவரைப் படுகொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. (ராய்ட்டர்சு)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 9 - சுசில் கொய்ராலா, நேபாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)
- பெப்ரவரி 11 - பூ. ம. செல்லத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
- பெப்ரவரி 13 - ஏ. நடராஜன், தமிழக எழுத்தாலர் (பி. 1938)
- பெப்ரவரி 13 - ஓ. என். வி. குறுப்பு, மலையாளக் கவிஞர் (பி. 1931
- பெப்ரவரி 16 - புத்துருசு புத்துருசு காலீ, முன்னாள் ஐநா பொதுச் செயலாளர் (பி. 1922)
- பெப்ரவரி 17 - எஸ். ரி. அரசு, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1926)
- பெப்ரவரி 19 - ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
- பெப்ரவரி 19 - உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய எழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1932)
- பெப்ரவரி 25 - ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)
- பெப்ரவரி 27 - விசுவா வர்ணபால, இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- பெப்ரவரி 28 - செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
- பெப்ரவரி 28 - குமரிமுத்து, தமிழத் திரைப்பட நடிகர்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்